உ.பி.யில் சாலையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிதடி, மோதல்: பதற வைக்கும் வீடியோ


உ.பி.யில் சாலையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிதடி, மோதல்:  பதற வைக்கும் வீடியோ
x

உத்தர பிரதேசத்தில் கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து காரை கொண்டு மோதியும், அடிதடியிலும் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.


லக்னோ,


உத்தர பிரதேசத்தில் காஜியாபாத் நகருக்கு உட்பட்ட மசூரி காவல் நிலையத்தின் கீழ் வரும் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர்கள் இரு குழுக்களாக தங்களுக்குள் மோதி கொண்டனர்.

அவர்கள் சாலையின் நடுவில் திடீரென ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும்போது, கார் ஒன்று விரைவாக வந்து மாணவர்கள் மீது மோதி நிற்கிறது. அதன்பின்னரும், சண்டை தொடர்ந்துள்ளது.

கார் மோதிய நபர் எழுந்ததும், அவரை சிலர் தாக்கும் காட்சிகளும் வீடியோவாக வெளிவந்து பதற்றம் ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாணவர்கள் இதனை பார்த்து அந்த பகுதியில் இருந்து அலறி அடித்து ஓடுகின்றனர்.

அவர்களில் ஒரு சில மாணவர்கள் போலீசாரின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி காஜியாபாத் எஸ்.பி. இராஜ் ராஜா கூறும்போது, சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து உள்ளோம்.

இந்த மோதலில் தொடர்புடைய மற்ற மாணவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாணவர்கள் மீது மோதிய காரை பறிமுதல் செய்துள்ளோம். பிற விசயங்கள் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நடைபெறும். கல்லூரியை சுற்றி போலீசாரின் ரோந்து அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.


1 More update

Next Story