பீகார் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடைபெறுகிறதா..? - நிதிஷ்குமார் கவலை


பீகார் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடைபெறுகிறதா..? - நிதிஷ்குமார் கவலை
x

கோப்புப்படம்

பீகார் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார்.

பாட்னா,

தமிழ்நாட்டில் பீகார் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்தநிலையில், இதற்கு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்தேன். இதுதொடர்பாக தமிழ்நாட்டு அதிகாரிகளுடன் பேசி, அங்கு பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.யை கேட்டுக்கொண்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story