டெல்லியில் 3 நாட்களுக்கு குளிர் அலை வீசும்: இந்திய வானிலை மையம் தகவல்
ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர் அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, டெல்லி ஜனவரி 5 முதல் ஜனவரி 9 வரை கடுமையான குளிர் அலையைக் கண்டது. இந்த மாதத்தில் இதுவரை 50 மணி நேரத்திற்கும் மேலாக அடர்த்தியான மூடுபனி பதிவாகியுள்ளது. இது 2019 ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமானதாகும்.
அடுத்த 5 நாட்களில் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 17-18 வரை வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்புள்ளது என்றும், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர் அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story