வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; போலீசாருக்கு, கலெக்டர் செல்வமணி அறிவுறுத்தல்


வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; போலீசாருக்கு, கலெக்டர் செல்வமணி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று போலீசாருக்கு கலெக்டர் செல்வமணி அறிவுரை வழங்கி உள்ளார்.

சிவமொக்கா:

வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று போலீசாருக்கு கலெக்டர் செல்வமணி அறிவுரை வழங்கி உள்ளார்.

வன்முறை தடுப்பு சட்டம்

சிவமொக்கா மாவட்டத்தில் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு விரைந்து நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செல்வமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வன்முறை வழக்குகள் தொடர்பான பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது தொடர்பான தகவல்களை அதிகாரிகளிடம் கலெக்டர் செல்வமணி கேட்டறிந்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையில் 68 வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் 39 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.87 லட்சத்து 75 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பின்தங்கிய சமூகத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story