யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக புகார் - வாட்ஸ் ஆப் குரூப் அட்மின் கைது


யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக புகார் - வாட்ஸ் ஆப் குரூப் அட்மின் கைது
x
தினத்தந்தி 6 Aug 2023 5:19 PM IST (Updated: 6 Aug 2023 5:22 PM IST)
t-max-icont-min-icon

அவதூறு கருத்து தொடர்பான புகாரின் அடிப்படையில் வாட்ஸ் ஆப் குரூப் அட்மினை போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வாட்ஸ் ஆப் குரூப் அட்மின் சஹாபுதின் அன்சாரி என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட முஸ்லிம் அன்சாரி என்ற நபர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோட்வாலி காவல் நிலைய தலைமைக் காவலர் அஜய் குமார் சேத் கூறுகையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறான வகையில் கருத்து பதிவிட்ட நபர் குறித்து கடந்த ஆகஸ்டு 4-ந்தேதி டுவிட்டர் மூலம் புகார் அளிக்கப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாட்ஸ் ஆப் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த வாட்ஸ் ஆப் குரூப்பின் பெயர், 'நகர் பலிகா பரிஷத் பதோஹி' என்றும், இதில் உத்தர பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உறுப்பினர்களாக இருந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story