பீதரில், விபத்தில் 7 பேர் பலி: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இரங்கல்


பீதரில், விபத்தில் 7 பேர் பலி: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இரங்கல்
x
தினத்தந்தி 5 Nov 2022 6:45 PM GMT (Updated: 5 Nov 2022 6:47 PM GMT)

பீதரில், விபத்தில் ஏழு பேர் பலியானதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பீதர் மாவட்டம் சிடகுப்பா தாலுகா பெமலிகோட்டாவில் நடந்த விபத்தில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர். இன்னும் சிலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பற்றி அறிந்ததும் மிகுந்த வேதனை உண்டானது. விபத்தில் சிக்கி பலியான 7 பேருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். விபத்து பற்றி பீதர் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுள்ளேன். காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோருக்கு தேவையான சிகிச்சை உதவிகளை செய்து கொடுக்கும்படியும் கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story