தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
பீகார் மாநில அரசு வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், ''பீகாரில் 84 சதவீதமாக இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோருக்கு அவர்களுக்கான பங்கு அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குகிறது. அதனால்தான், சாதி புள்ளிவிவரங்களை அறிந்துகொள்வது முக்கியம்'' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ''தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை மோடி அரசு நடத்த வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன், நாங்கள் நடத்துவோம். சமூக நீதியை வலுப்படுத்த இது அவசியம்'' என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story