உடுப்பியில் இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து


உடுப்பியில்  இருதரப்பினர் இடையே மோதல்;  2 பேருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:45 PM GMT)

உடுப்பி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

உடுப்பி-

உடுப்பி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதம்

உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (வயது28). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிரதாப்பிற்கும், அதேப்பகுதியை சேர்ந்த உதய்க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதாப் பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பிரம்மவார் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக உதய் தனது நண்பர்களுடன் வந்தார். பிரதாப்பை, உதய் மற்றும் நண்பர்கள் வழிமறித்தனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தகராறாக மாறியது. அப்போது அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து சென்றனர்.

கத்திக்குத்து

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மணிப்பால் பகுதியில் பிரதாப் தனது நண்பர்கள் திலக், ஹர்ஷித் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு உதய் தனது நண்பர்கள் சித்தாடி, அப்ரித் ஆகியோருடன் வந்தார். அப்போது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி கொண்டனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மற்றவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணிப்பால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கத்தி குத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

4 பேர் கைது

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சித்தாடி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story