உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் இரவு முழுவதையும் பயத்துடன் வீதிகளில் கழித்தனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகளில் சமையலறை பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் தரையில் விழுந்தன. இதனால் உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பீதியடைந்த அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அவர்கள் இரவு முழுவதையும் பயத்துடன் வீதிகளில் கழித்தனர். எனினும் இந்த நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
Related Tags :
Next Story