ஒற்றுமையை தொடர எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஏப்ரலில் நடத்த காங்கிரஸ் திட்டம்


ஒற்றுமையை தொடர எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஏப்ரலில் நடத்த காங்கிரஸ் திட்டம்
x

கோப்புப்படம்

ஒற்றுமையை தொடர எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஏப்ரலில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல்கொடுத்து வருகின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டன.

இந்நிலையில் இந்த ஒற்றுமையை தொடரும்வகையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அடுத்த மாதத்தில் (ஏப்ரல்) நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முன்மொழிவு தெரிவிக்கப்பட்டது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங் உள்ளிட்டோர், எதிர்க்கட்சிகளின் தேசியத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளின் ஒரு கூட்டத்தை காங்கிரஸ் கூட்ட வேண்டும். அதில், வருகிற 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலை சந்திப்பதற்கான திட்டத்தை வகுப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் வலியுறுத்தினர்.

அதன் அடிப்படையில், முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story