சித்தராமையா கார் மீது முட்டை வீசியது காங்கிரஸ் கட்சியினர்தான்; பாஜக


சித்தராமையா கார் மீது முட்டை வீசியது காங்கிரஸ் கட்சியினர்தான்;  பாஜக
x
தினத்தந்தி 20 Aug 2022 7:37 PM IST (Updated: 20 Aug 2022 7:41 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கார் மீது முட்டையை வீசி எறியவைத்து அந்த பழியை பா,ஜனதா கட்சியினர் மீது போடுவது கண்டிக்கத்தக்கது என்று மந்திரி முனிரத்னா குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா அரசு நல்லாட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. 4 ஆண்டுகளாக ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரசாருக்கு எந்த ஒரு காரணமும் கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடக்க உள்ளதால் காங்கிரசார் தேவையின்றி பல்வேறு காரணங்களை கூறி அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற போராட்டங்கள் மூலம் அனுதாப அலையை பெற்றுவிடலாம் என்று காங்கிரசார் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் ஒரு போதும் பலிக்காது. வேண்டும் என்றே போராட்டங்கள் என்ற பெயரில் கலவரத்தை தூண்டி அனுதாப அலையை பெற்று விடலாம் என்று காங்கிரசார் சதி திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போராட்டத்தின் போது சித்தராமையா கார் மீது அவரது ஆதரவாளர்களை கொண்டு கற்கள் முட்டைகளை வீசிவிட்டு அந்த பழிமை பா.ஜனதாவினர் மீது போடுவது கண்டிக்கத்தது.

போராட்டத்தின் போது உரிய பாதுகாப்பு அளிக்காததால் சித்தராயைவின் கார் மீது முட்டை எறிந்ததாக காங்கிரசார் குற்றம் சாட்டுகிறார்கள். சித்தராமையாவின் காரை சுற்றி காங்கிரசார் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் முட்டைய வீசி எறிந்துள்ளதாக உளவுத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், தேவையின்றி அந்த பழியை பா.ஜனதாவினம் மீது கூறுவதை ஒரு போதும் ஏற்கமுடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story