குடகு போலீஸ் சூப்பிரண்டை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்


குடகு போலீஸ் சூப்பிரண்டை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
x

சித்தராமையா கார் மீது முட்டை வீசிய சம்பவத்தில் குடகு போலீஸ் சூப்பிரண்டை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு:

சித்தராமையா கார் மீது முட்டை வீசிய சம்பவத்தில் குடகு போலீஸ் சூப்பிரண்டை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பு இல்லை

முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமைகளில் ஒன்று. வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட குடகிற்கு சென்ற அவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க சாத்தியமா?. அரக ஞானேந்திரா மந்திரி பதவியில் நீடிக்கலாமா?. முதல்-மந்திரி பதிலளிக்க வேண்டும்.

போலீஸ் மந்திரி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டுமா? அல்லது குண்டர் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டுமா?. ரவுடிகள் படை சித்தராமையா கார் மீது 2 முறை முட்டை வீசியுள்ளனர். இதை போலீசார் அனுமதித்துள்ளனர். அப்படி என்றால் இந்த தாக்குதல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற தாக்குதல் அல்லவா?. போலீஸ் துறை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. பா.ஜனதா அரசு செயல்படாத நிலையில் உள்ளது.

பணி இடைநீக்கம்

முட்டை வீசியவர்களை கைது செய்த போலீசார் உடனடியாக அவர்களை விடுவித்துள்ளனர். பா.ஜனதா எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன் அழைத்து வந்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது தீவிரமான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் விட்டது ஏன்?. அப்படி என்றால் இது அரசின் ஆதரவுடன் நடைபெற்ற சம்பவம் அல்லவா?. இந்த தாக்குதலை, எதிர்க்கட்சி தலைவரின் உயிருக்கு சேதம் ஏற்பட்டதாகவே கருத வேண்டும்.

சித்தராமையா வரும் இடத்தில் பா.ஜனதாவினர் கூட்டமாக குவிந்திருந்தும் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. குண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்ததா?. பணியில் அலட்சியாக செயல்பட்ட குடகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.


Next Story