சோனியா காந்தி தலைலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்


சோனியா காந்தி தலைலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2022 5:41 PM IST (Updated: 9 Jun 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், 'யங் இந்தியா' நிறுவனத்தின் பங்குதாரர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதனிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி வரும் 13-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜராக செல்லும் போது, தாங்களும் உடன் செல்ல வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சியின் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக ஆலோசிக்க சோனியா காந்தி தலைமையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை ராகுல் காந்தி ஆஜராகும் போது நாடு முழுவதும் கண்டன போராட்டங்கள் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story