காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி


காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
x

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கரில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றைவில்லை எனவும் , மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரடைந்து உள்ளதாகவும் கூறி காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.

இந்நிலையில், பாஜக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் சத்தீஸ்கர் சட்டசபையில் நள்ளிரவு வரை நீடித்தது. இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடந்த நிலையில் இதில் பாஜக கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்தது.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 71 காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர். 13 பாஜக உறுப்பினர்கள் உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாஜக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.


Next Story