தெலுங்கானாவிலும் சாதி வாரி கணக்கெடுப்பு: சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்


தெலுங்கானாவிலும் சாதி வாரி கணக்கெடுப்பு: சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்
x

தெலுங்கானா சட்டமன்ற கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை, மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் இன்று தாக்கல் செய்தார்

ஐதாரபாத்,

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்தாண்டு வெளியிடப்பட்டது. இதன்பிறகு இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. பீகாரை தொடர்ந்து கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதுகுறித்த விவரங்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். இதை நிறைவேற்றும் விதமாக, கடந்த 4ம் தேதி முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

தெலுங்கானா சட்டமன்ற கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை, மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையிலான வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு வீடு வீடாக சென்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Next Story