குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்: காங். தேர்தல் அறிக்கை


குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்: காங். தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 2 May 2023 4:45 AM GMT (Updated: 2 May 2023 4:47 AM GMT)

வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story