காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் - ராஜஸ்தான் மாநில கட்சி கூட்டத்தில் தீர்மானம்
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமிக்கக்கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்-மந்திரி அசோக் கெலாட் முன்மொழிந்த இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மாநில உணவுத்துறை மந்திரி பிரதாப் சிங் கச்சாரியா தெரிவித்தார்.
இதைப்போல மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கச்சாரியா கூறினார்.
Related Tags :
Next Story