மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது... விஜய் சங்கல்ப யாத்ரா நிறைவு விழா பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு


மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது... விஜய் சங்கல்ப யாத்ரா நிறைவு விழா பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு
x

பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

பெங்களூரு,

பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகை தந்துள்ளார் . தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கின்ச்ச்ட். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்ற அவர், அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைத்தார்.

பிறகு அவர் பெங்களூரு வந்து, இங்கு கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது. காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. அவர்களின் கனவு மோடிக்கு கல்லறை தோண்டுவது என்றால், நாட்டினுடைய, கர்நாடக மக்களின் நம்பிக்கை தாமரை மலர்வது என்பது தான்.

உலகம் தற்போது நம்பிக்கையோடு இந்தியாவை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தியா நம்முடைய கர்நாடகத்தை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்ததில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இதனை நான் பாராட்டுகிறேன். நேற்று ஹுப்ளியில் ஒரு தொழிற்பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நம்முடைய புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதற்கு காரணம் மோடி அல்ல. நீங்கள் அளித்த வாக்கே காரணம். இதேபோல கர்நாடகாவின் புகழ் உலகெங்கும் ஒலிக்கவேண்டும்.

எனவே நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்து கர்நாடகாவின் புகழை உலகெங்கும் ஒலிக்கவைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story