என்னை தாக்கி பேசுவதை காங்கிரஸ் ஒருபோதும் மறப்பதில்லை - பிரதமர் மோடி


என்னை தாக்கி பேசுவதை காங்கிரஸ் ஒருபோதும் மறப்பதில்லை - பிரதமர் மோடி
x

மத்தியபிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.

ஜெய்ப்பூர்,

மத்தியபிரதேச மாநிலத்தில் 230 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு வரும் 17ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சிந்தி மாவட்டத்தில் நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "ஊழல் நடப்பதில் இருந்து தடுக்கப்பட்ட பணம் ஏழை மக்களுக்கு விவசாய திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்காக விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 2 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. என்னை தாக்கி பேசுவதை காங்கிரஸ் ஒருபோதும் மறப்பதில்லை. ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிப்பதை காங்கிரஸ் எதிர்த்தது" என்றார்.


Next Story