சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் காங்கிரஸ் 'சத்தியாகிரக' போராட்டம்


சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்
x

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் 2-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரசால் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

அதேபோல், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் பின் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story