ராகுல் காந்தி பங்கு இல்லாமல் மத்தியில் பா.ஜ.க. அல்லாத அரசு சாத்தியமில்லை - மல்லிகார்ஜுன கார்கே


ராகுல் காந்தி பங்கு இல்லாமல் மத்தியில் பா.ஜ.க. அல்லாத அரசு சாத்தியமில்லை - மல்லிகார்ஜுன கார்கே
x

கோப்புப்படம்

காங்கிரஸ், ராகுல் காந்தி பங்கு இல்லாமல் மத்தியில் பா.ஜ.க. அல்லாத அரசு சாத்தியமில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

ஐதராபாத்,

காங்கிரஸ் தலைவராக பதவியேற்றபிறகு முதல் முறையாக மல்லிகார்ஜுன கார்கே தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றார்.

அங்கு நேற்று அவர், ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்றார். பின்னர் அவருடன், ஐதராபாத்தில் மாலையில் நடந்த ஒரு தெருமுனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கார்கே பேசினார்.

அப்போது அவர், 'மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டைப் பிளக்கவும், வெறுப்புணர்வை பரப்பவும் முயல்கின்றன.

மோடியும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரேசகர ராவும் ஒன்றுதான். பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாக கூறும் சந்திரசேகர ராவ், பா.ஜ.க. கொண்டுவரும் அனைத்து சட்டங்களையும் ஆதரிக்கிறார். மற்ற மாநிலங்களுக்குச் சென்று பிற கட்சித் தலைவர்களை சந்தித்துவரும் சந்திரசேகர ராவ், முதலில் தெலுங்கானாவில் கவனம் செலுத்தட்டும். காங்கிரஸ், ராகுல் காந்தியின் பங்கு இல்லாமல் மத்தியில் பா.ஜ.க. அல்லாத அரசு சாத்தியமில்லை. வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும்.' இவ்வாறு அவர் பேசினார்.


Next Story