தொடர்ந்து உயர்ந்துவரும் வெங்காய விலை- மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு


தொடர்ந்து உயர்ந்துவரும் வெங்காய விலை- மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
x

வெங்காயத்தை கிலோ 25 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

புதுடெல்லி,

வெங்காயத்தை கிலோ 25 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கரீப் பருவப் பயிர் வரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெங்காய விலை அதிகரிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மத்திய பண்டகசாலை, மாநில கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் இயக்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. மாநிலங்களில் 54 நகரங்களில் 457 சில்லறை விற்பனை மையங்களை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1 More update

Next Story