மத்திய பிரதேச கிராமத்தில் அசுத்தமான குடிநீர்; 3 நாட்களில் 4 பேர் சாவு.! அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு


மத்திய பிரதேச கிராமத்தில் அசுத்தமான குடிநீர்; 3 நாட்களில் 4 பேர் சாவு.! அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு
x

கோப்புப்படம் 

கிராமத்தை சேர்ந்த மேலும் சிலர் இதே பிரச்சினைகளால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சாத்னா,

மத்திய பிரதேசத்தின் சாத்னா மாவட்டத்துக்கு உட்பட்ட திகுரியா கிராமத்தை சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு கடந்த 6-ந்தேதி திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாள் உயிரிழந்தார்.

இதைப்போன்ற பிரச்சினைகளுடன் 8-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவரும் அன்றைய தினத்தில் பலியானார். இதே கிராமத்தை சேர்ந்த மேலும் இருவர் இதுபோன்ற பிரச்சினையில் நேற்று முன்தினம் இறந்தனர்.

இவர்களை தவிர, இந்த கிராமத்தை சேர்ந்த மேலும் சிலர் இதே பிரச்சினைகளால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.


Next Story