இந்திய படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க கடந்த ஓராண்டில் ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து


இந்திய படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க கடந்த ஓராண்டில் ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
x
தினத்தந்தி 11 Oct 2023 1:45 AM IST (Updated: 11 Oct 2023 1:47 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்க கடந்த ஓராண்டில் ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

புதுடெல்லி,

இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்ட ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கு கடந்த ஓராண்டில் ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் சீனா எல்லை அருகே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதன்படி அவசர கால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆயுதங்கள், டிரோன்கள், ஏவுகணைகள், ரேடார் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக ராணுவத்துக்காக 70 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதே போல் கடற்படைக்கு 65 ஒப்பந்தங்களும், விமானப்படைக்கு 35 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 More update

Next Story