மத்திய அரசின் புத்தாண்டு பரிசு இது: வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்.கண்டனம்
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
புதுடெல்லி,
புதுடெல்லி, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023 முதல், வணிக சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. அதே சமயம், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1,068.50க்கு விற்பனையகிறது.
இந்த நிலையில், வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில், புத்தாண்டின் பரிசுதான் இது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 25 உயர்ந்துள்ளது. இது ஒரு தொடக்கமே" என்று தெரிவித்டுள்ளது.
Related Tags :
Next Story