கர்நாடகத்தில் புதிதாக 634 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 634 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

பெங்களூரு

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 22 ஆயிரத்து 586 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 610 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 7 பேருக்கும், பல்லாரி, பெங்களூரு புறநகர், மைசூருவில் தலா 2 பேருக்கும், உடுப்பி, உத்தரகன்னடாவில் தலா 3 பேருக்கும், பெலகாவி, தார்வார், கலபுரகி, சிவமொக்கா, துமகூருவில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.


பெங்களூரு நகர் மற்றும் தட்சிண கன்னடாவில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 503 பேர் குணம் அடைந்தனர். 4,500 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 2.80 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் பாதிப்பு 833 ஆக இருந்த நிலையில் அது நேற்று சற்று குறைந்து 634 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story