கர்நாடகத்தில் புதிதாக 530 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 530 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 530 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 14 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 530 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மைசூருவில் 6 பேர், தட்சிண கன்னடா, கலபுரகியில் தலா 5 பேர், பல்லாரி, பெலகாவி, ராமநகர், உத்தரகன்னடாவில் தலா 3 பேர், உடுப்பியில் 2 பேர், பாகல்கோட்டை, தார்வார், கதக், சிவமொக்கா, விஜயாப்புராவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 39 லட்சத்து 61 ஆயிரத்து 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. நேற்று 637 பேர் குணமடைந்தனர். இதுவரை 39 லட்சத்து 16 ஆயிரத்து 320 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4,928 பேர் மருத்துவ சிகிச்சை உள்ளனர்.

மேற்கண்ட தகவலை கர்நாடக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story