கர்நாடகத்தில் புதிதாக 738 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று 19 ஆயிரத்து 624 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 698 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 646 பேர் குணம் அடைந்தனர். மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 20 ஆக உள்ளது.
இதில் பெங்களூருவில் மட்டும் 4 ஆயிரத்து 819 பேர் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 3.76 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story