கர்நாடகத்தில் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 826 பேருக்கு தொற்று உறுதி
நேற்று ஒரே நாளில் 600 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"கர்நாடகத்தில் நேற்று 25,348 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் அதிகபட்சமாக பெங்களூருவில் 746 பேருக்கும், மைசூருவில் 17 பேருக்கும் தொற்று உறுதியானது.
நேற்று ஒரே நாளில் 600 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6,666-ஆக உள்ளது. நேற்று கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுவரை ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 77 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்."
இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story