இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு


இந்தியாவில்  இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சரியாக 2,259 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கு கீழே பதிவாகி வந்தது. நேற்று அது மீண்டும் 2 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் சரியாக 2,259 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

நேற்று முன் தினம் 1,829 நேற்று 2,829 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,259 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,31,29,563 லிருந்து 4,31,822 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,614 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,89,841 லிருந்து 4,25,92,455 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,24,323 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,419 லிருந்து 15,044 ஆனது.

நேற்று ஒரே நாளில் 15,12,766 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 191.96 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story