கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 25 March 2023 3:45 PM IST (Updated: 25 March 2023 4:02 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 146 நாட்கள் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 1590- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 601 ஆக உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22 ஆம் தேதி பிரதமர் மோடி அதிகரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை, ஒப்பிட்டு அளவில் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு சுவாச பிரச்சனை பாதிப்பு அதிகம் உள்ளது.

அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story