2023-24-ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்
2023-24-ம் ஆண்டுக்கான பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.
பெங்களூரு:
2023-24-ம் ஆண்டுக்கான பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.
மாநகராட்சி பட்ஜெட்
பெங்களூரு மாநகராட்சிக்கு மன்ற கவுன்சிலர்களின் பதவி காலம் கடந்த 2020-ம் ஆண்டு ஆண்டுடன் நிறைவடைந்தது. மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படாததால், நிர்வாக அதிகாரி மூலம் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிகாரிகள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 3-வது முறையாக அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) 2023-24-ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்கள்.
பெங்களூரு மாநகராட்சி நிர்வாகி அதிகாரி ராகேஷ் சிங், தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஆகியோரது முன்னிலையில் நிதித்துறை சிறப்பு கமிஷனர் ஜெயராம் ராய்புர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு டவுன் ஹாலில் காலை 11.30 மணிக்கு நடக்கிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டங்கள்
இது அதிகாரிகளின் பட்ஜெட் என்பதால், விசேஷமான திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு இல்லை என்றும், ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மட்டுமே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் ஏதாவது அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.