லைவ் அப்டேட்ஸ்: 3 மாநில தேர்தல்- நாகலாந்து, திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது


லைவ் அப்டேட்ஸ்: 3 மாநில தேர்தல்- நாகலாந்து, திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது
x
தினத்தந்தி 2 March 2023 2:30 AM GMT (Updated: 2 March 2023 5:33 PM GMT)

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

*திரிபுராவில் தற்போது முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

*மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது.

*நாகாலாந்தில் முதல்-மந்திரி நைபியு ரியோ தலைமையில் என்.டி.பி.பி. ஆட்சி நடக்கிறது.

3 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

Live Updates

  • 2 March 2023 3:00 PM GMT

    புதுடெல்லி,

    நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

    திரிபுரா

    திரிபுராவில் பாஜக கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிபிஎம் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டிஎம்பி கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆட்சியமைக்க 31 இடங்களே போதுமான சூழலில் பாஜக கூட்டணி 33 இடங்களை பெற்றுள்ளது.

    இதன்மூலம் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைகிறது. திரிபுராவின் தற்போதைய முதல்-மந்திரியாக மானிக் சாஹா பர்தோவாலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    நாகாலாந்து

    நாகாலாந்தில் எண்டிபிபி-பாஜக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. மற்ற கட்சிகள் 23 இடங்களை கைப்பற்றியுள்ளனர். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆட்சியமைக்க 31 இடங்கள் போதும் என்ற சூழலில் 37 இடங்களை பெற்றுள்ள என்டிபிபி-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.

    நாகாலந்தின் தற்போதைய முதல்-மந்திரி ரியோ அங்காமி 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    மேகாலயா

    மேகாலயாவில் என்பிபி கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சி 21 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு யாருக்கும் பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை. அதனால் இங்கு கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.

  • 2 March 2023 11:21 AM GMT

    நாகாலாந்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.பி.பி

    நாகாலாந்தில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட என்.டி.பி.பி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 34 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது என்.டி.பி.பி கூட்டணி. வடக்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் நிப்பியு ரியோ 17,045 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அலோங்டாகி தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் டெம்ஜென் இம்னா அலோங் 9,274 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

  • 2 March 2023 9:58 AM GMT

    நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக 2 பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு

    நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரு பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட என்.டி.பி.பி வேட்பாளர் சல்ஹிடியூனோ குரூஸ் வெற்றி பெற்றுள்ளார். தீமாப்பூர் 3-வது தொகுதியில் போட்டியிட்ட என்.டி.பி.பி வேட்பாளர் ஹக்கானி ஜக்காலு வெற்றி பெற்றுள்ளார்.

  • 2 March 2023 7:51 AM GMT



  • 2 March 2023 7:50 AM GMT



  • 2 March 2023 7:48 AM GMT



  • 2 March 2023 7:20 AM GMT

    *திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

    *மேகாலயா மாநிலத்தில் இதுவரையில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை..

     

  • 2 March 2023 7:04 AM GMT

    திரிபுரா - கட்சி வாரியாக முன்னிலை நிலவரம்

  • 2 March 2023 6:51 AM GMT



  • 2 March 2023 6:51 AM GMT




Next Story