திருப்பதியில் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்... முதல் முறையாக கோவிலுக்கு வெளியே எண்ணப்படும் காணிக்கை
திருப்பதியில் முதல்முறையாக காணிக்கை பணத்தை கணக்கிடும் பணி கோவிலுக்கு வெளியே நடைபெறுகிறது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் ஆகியவற்றை இதுவரை கோவிலுக்குள் கணக்கிட்டு வந்தனர். இன்று முதல் கோவிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் எண்ணப்படுகிறது.
இதற்காக, கோவிலில் இருந்து உண்டியல் அண்டாக்கள், லாரியில் பணம் என்னும் கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்ட பிறகு, காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
தேவஸ்தான வரலாற்றில் பக்தர்களின் காணிக்கை கோவிலுக்கு வெளியே எண்ணப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Related Tags :
Next Story