காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி - சோக சம்பவம்


காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி - சோக சம்பவம்
x

காதலர் தினத்தை கொண்டாட காதல் ஜோடி கோவா சென்றுள்ளனர்.

பனாஜி,

உத்தரபிரதேசத்தை காதல் ஜோடி விபு சர்மா (வயது 27), சுப்ரியா துபே (வயது 26). விபு டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். இருவரும் காதலிப்பது அவர்களது பெற்றோருக்கு தெரியாது.

இதனிடையே, காதலர் தினத்தை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன் விபு சர்மாவும், சுப்ரியா துபேவும் கோவா சென்றுள்ளனர். அவர்கள் கோவாவில் தங்கி பல்வேறு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில், காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் காதல் ஜோடி கோவாவின் பலோலம் கடற்கரையில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது எதிராராத விதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.

இது குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story