சின்னசாமி மைதான மேற்கூரையில் விரிசல்; கிரிக்கெட் ரசிகர்கள் அவதி
சின்னசாமி மைதான மேற்கூரையில் விரிசல் கிரிக்கெட் ரசிகர்கள் அவதிக்குள்ளாகினார்கள்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தலைநகர் பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே தொடர் மழை காரணமாக சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்கள் மாடத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியே மழைநீர் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிகளில் கசிந்தது.
இதனால் கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க வந்த பல ரசிகர்கள் அவதிப்பட்டனர். மேலும் மழைநீர் கசிவு ஏற்பட்டது தொடர்பான புகைப்படங்களை கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
Related Tags :
Next Story