காரை ஏற்றி தெருநாயை கொன்ற டிரைவர் மீது கிரிமினல் வழக்கு


காரை ஏற்றி தெருநாயை கொன்ற  டிரைவர் மீது கிரிமினல் வழக்கு
x

காரை ஏற்றி தெருநாயை கொன்ற டிரைவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு திலக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜெயநகர் 9-வது பிளாக் பகுதியில் தெருநாய் ஒன்று இருந்தது. இந்த நாய்க்கு அப்பகுதி மக்கள் உணவு அளித்து வந்தனர். மேலும் அந்த நாய்க்கு கரியா என்றும் அப்பகுதி மக்கள் பெயர் சூட்டி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி காலை அந்த தெருநாய் அங்குள்ள பால் கடையின் முன்பு படுத்து இருந்தது.


அப்போது அந்த வழியாக காரை ஓட்டி வந்த டிரைவர் கடையின் முன்பு படுத்து கிடந்த தெருநாயை வேண்டும் என்றே காரை ஏற்றி கொன்றுவிட்டு சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சென்னகேசவா என்பவர் அளித்த புகாரின்பேரில் திலக்நகர் போலீசார் காரின் டிரைவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story