இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 782 ஆக குறைவு


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 782 ஆக குறைவு
x

கொரோனா தொற்றிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 417 குறைந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 865 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 782 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. தொற்றினால் இதுவரையில் 4 கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 101 மாதிரிகளை பரிசோதித்ததில் தினசரி பாதிப்பு விகிதம் 0.61 சதவீதமாக பதிவாகி உள்ளது. தொற்றின் பாதிப்பில் இருந்து நேற்று ஒரு நாளில் 1,193 பேர் மீண்டிருக்கிறார்கள். 4 கோடியே 44 லட்சத்து 45 ஆயிரத்து 206 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

தொற்றின் பாதிப்பினால் நேற்று முன்தினம் 4 பேர் உயிரிழந்தனர். நேற்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை 6 ஆகும். இதில் கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் 3-ஐ கணக்கில் சேர்த்திருப்பதுவும் அடங்கும். தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிகிறது. நேற்றும் இந்த எண்ணிக்கையில் 417 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சையில் 8 ஆயிரத்து 675 பேர் இருந்தனர்.


Next Story