இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,675 ஆக குறைந்தது


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,675 ஆக குறைந்தது
x

நாட்டில் மேலும் 1 ஆயிரத்து 675 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில், சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. பிறகு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது. இருப்பினும், ஓரிரு நாட்களாக ெதாற்று குறைந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 1,675 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

நேற்று முன் தினம் 2,226 நேற்று 2,022 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 1,675 ஆக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,31,38,393 லிருந்து 4,31,40,068 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 1,635 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,99,102 லிருந்து 4,26,00,737 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,490 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,832 லிருந்து 14,841 ஆனது.

இந்தியாவில் ஒரே நாளில் 13,76,878 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 192.52 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story