சந்திரயான்-3 வெற்றி; கேரள கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு


சந்திரயான்-3 வெற்றி; கேரள கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு
x

இஸ்ரோ தலைவர் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்தியா, கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் இறங்கி வரலாறு படைத்தது. இதன்மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. தற்போது இந்தியாவின் சந்திரயான்-3 சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்தியர்கள் அனைவரும் சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளார். அங்குள்ள பௌர்ணமிகாவு-பத்ரகாளி கோவிலில் வழிபாடு செய்தார்.

அதன்பிறகு இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் அளித்த பேட்டியில், " இந்தியா இப்போது நிலா, சூரியன், செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் திறன்களைக் கொண்டுள்ளது" என்றார்.




Next Story