பிரதமருக்கு கொலை மிரட்டல்: குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை: டெல்லி கோர்ட்டு உத்தரவு


பிரதமருக்கு கொலை மிரட்டல்: குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை: டெல்லி கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம் 

போலீஸ் ஹெல்ப்லைன் தொலைபேசி எண்.100-ஐ அழைத்து, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

புதுடெல்லி,

டெல்லியில் முகமது முக்தார் அலி என்பவர், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாளில் போலீஸ் ஹெல்ப்லைன் தொலைபேசி எண்.100-ஐ அழைத்து, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 506(2)-ன் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கலானது. இந்த வழக்கை டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரித்தது.

விசாரணை முடிவில், முகமது முக்தார் அலி, யாரையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாமல் போலீஸ் தரப்பு தவறி விட்டது என்று மாஜிஸ்திரேட்டு சுபம் கூறி, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.


Next Story