'பிரதமர் மோடி இல்லையென்றால் ராமர் கோவில் கட்டப்பட்டிருக்காது' - காங்கிரஸ் மூத்த தலைவர்


பிரதமர் மோடி இல்லையென்றால் ராமர் கோவில் கட்டப்பட்டிருக்காது - காங்கிரஸ் மூத்த தலைவர்
x

ராமர் கோவில் மற்றும் பாலராமர் பிரதிஷ்டைக்கான முழு பெருமையையும் பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி,

உத்தரபிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இல்லையென்றால் ராமர் கோவில் கட்டப்பட்டிருக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பிரதமர் மோடி இல்லாவிட்டால் இந்த கோவில் கட்டப்பட்டிருக்காது. அதனால்தான், ராமர் கோவில் மற்றும் பாலராமர் பிரதிஷ்டைக்கான முழு பெருமையையும் பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன்.

பல அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பல பிரதமர்கள் வந்தார்கள், சென்றார்கள். ஆனால் 500 ஆண்டுகால ராமர் கோவிலுக்கான காத்திருப்புக்கு முடிவு கட்ட அரசியல் விருப்பத்தை யாரும் காட்டவில்லை. மகாத்மா காந்தி 'ராமராஜ்ஜியம்' கனவு கண்டார், அவருடைய கொள்கைகளை வலியுறுத்தும் கட்சியான காங்கிரஸ் ராமருக்கு எதிரான கட்சியாக இருக்க முடியாது. எனவே, பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமே தவிர, ராமருக்கு எதிராக அல்ல" என கூறினார்.


Next Story