இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி


இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி
x

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ளார்.

பெங்களூரு,

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் நகருக்கு இன்று சென்றார். அங்குள்ள கடற்படைத் தளத்திற்குச் செல்லும் பாதுகாப்பு அமைச்சர், இந்திய கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடுவார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் டுவீட்டரில், "புது டெல்லியில் இருந்து கர்நாடகா மாநிலம் கார்வாருக்கு செல்கிறேன். எனது இரண்டு நாள் பயணத்தின் போது கர்வாரில் உள்ள கடற்படைத் தளத்திற்குச் சென்று இந்திய கடற்படை வீரர்களுடன் உரையாடுவேன். இதனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story