டெல்லி: 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் உயிரிழப்பு; மேலும் 5 பேர் கைது


டெல்லி: 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் உயிரிழப்பு; மேலும் 5 பேர் கைது
x

டெல்லியில் 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. பழைய ராஜிந்தர்நகர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அங்கு ஒரு கட்டிடத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அதன் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்து விட்டது.

அப்போது அங்கிருந்த பயிற்சி மாணவர்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவர், 2 மாணவிகள் பலியானார்கள். இந்த சம்பவம் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story