அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜக போராட்டம்


அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜக போராட்டம்
x

சிபிஐ விசாரணைக்கு உள்ளான அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக போராட்டம் நடத்தியது.

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. சுமார் 9 மணி நேரம் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக் கோரி டெல்லியில் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. டெல்லி சட்ட சபைக்கு வெளியே பாஜகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story