மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு


மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன்  - டெல்லி நீதிமன்றம் உத்தரவு
x

வரும் பிப்ரவரி 13 முதல் 15-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது மணிஷ் சிசோடியா தனது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தநிலையில், வரும் பிப்ரவரி 13 முதல் 15-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக அமலாக்கத்துறை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தநிலையில் மணிஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story