அவதூறு வழக்கில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நேரில் ஆஜராக டெல்லி கோர்ட்டு சம்மன்


அவதூறு வழக்கில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நேரில் ஆஜராக டெல்லி கோர்ட்டு சம்மன்
x

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத், அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோரை 900 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தொடர்புப்படுத்தி ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் அவதூறாக பேசியதாக அவர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கஜேந்திர சிங் செகாவத் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இது குறித்து ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 7-ந்தேதி அசோக் கெலாட் நேரில் ஆஜராக வேண்டும் என ரோஸ் அவென்யூ கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story