கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் தலையிட டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் தலையிட டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. இதை எதிர்த்தும், அமலாக்கத்துறை காவலை எதிர்த்தும் டெல்லி ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இதை நேற்று விசாரித்த நீதிபதி ஸ்வரண கந்தா சர்மா, கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அதேநேரம் இந்த வழக்கில் 2-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story