டெல்லியில் புதிதாக 2 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று..!


டெல்லியில் புதிதாக 2 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று..!
x

கோப்புப்படம் ANI

டெல்லியில் புதிதாக 2 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தேசிய தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,80,402 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,623 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது டெல்லியில் 8,343 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,367 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 6,583 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் 252 பேர் முதல் தவணை தடுப்பூசியும் 827 பேர் 2-வது தடுப்பூசி தவணையும் 5,504 பேர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

1 More update

Next Story