டெல்லியில் புதிதாக 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!


டெல்லியில் புதிதாக 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
x

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 735- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 795 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை . டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,221 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 537 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். டெல்லியில் தற்போது 2,442 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story